The Indian Times

கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தில் திடீரென புதிய மாற்றம்! குழப்பத்தில் ரசிகர்கள்.

கார்த்தியின் சுல்தான் படம் இன்னும் 1 வாரத்தில் திரைக்கு வர தயாராக உள்ள நிலையில் இந்த படத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். இசையமைப்பாளர் விவேக் மேர்வின் தான் இந்த படத்தில் அணைத்து பாடல்களுமே இசையமைத்துள்ளார். ஆனால் இந்த படத்தின் பின்னணி இசைக்காக வேறொரு பிரபலமான இசையமைப்பாளரை போட்டுள்ளார் படக் குழுவினர். தற்போது கார்த்தி, பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படத்தில் ராஷ்மிகா மந்தண்ணா இவருக்கு கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வருகிற ஏப்ரல் 2 ஆம் தேதி இந்த படம் ரிலீசாக உள்ளது.

Advertisement

ஏற்கனவே இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதிலும் விவேக் மேர்வின் இசையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஜெய் சுல்தான் என்ற பாடல் வைரலாக பரவியது. சமீபத்தில் இந்த படத்தின் எப்படி இருந்த நாங்க 3வது பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி வைரலானது. இசையமைப்பாளர் விவேக் மெர்வின் இசையமைத்த பாடல்களே ஹிட்டாகி கொண்டிருந்த நிலையில் இந்த படத்தில் பின்னணி இசைக்காக மற்றொரு இசையமைப்பாளரை மாற்றியுள்ளனர் படக்குழுவினர்.

Advertisement

இந்த படத்தின் ட்ரைலருக்கு பின்னணி இசையமைத்து இசையமைப்பாளர் கொடுத்தது யுவன் ஷங்கர் ராஜா தான். படங்களின் பாடல்களுக்கு விவேக் மெர்வினும் பின்னணி இசைக்கு யுவன் இசையமைத்துள்ளார். படம் ரிலீசாகும் நேரத்தில் இந்த மாற்றத்தை கொண்டுவந்துள்ளது படத்தின் வெற்றியை பாதிக்குமா என்று தெரியவில்லை. மாஸ்டர் படத்திற்கு பிறகு இந்த படத்திற்கு தான் மிக பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. இந்நிலையில் இசைமைப்பாளரை மாற்றியுள்ளது கோலிவுட் வட்டாரத்தையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in