ஷாருக்கானுடன் கைகோர்க்கும் இயக்குனர் அட்லீ ! விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் தன் முதல் படத்திலேயே மிக பெரிய வெற்றியை கொடுத்து , தொடர்ந்து 4 வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீ. இவர் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தது அனைவருக்கும் தெரியும். இவரும் ஷங்கரை போலவே தன் படங்களை பிரம்மாண்டமாக படைப்பதில் கைதேர்ந்தவர் என்றே கூறலாம். இவர் தமிழில் ராஜா ராணி , தெறி , மெர்சல் , பிகில் என 4 படங்களை இயக்கியுள்ளார். அதில் தளபதி விஜயை வைத்தே 3 படங்களை இயக்கி உள்ளார் அட்லீ.

கட்டாயம் படிக்கவும்  துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் டீசர் இதோ

ஷாருக்கானுடன் கைகோர்க்கும் இயக்குனர் அட்லீ ! விவரம் உள்ளே 1

விளம்பரம்

இவர் தீவிரமான தளபதி ரசிகர் என்பது அனைவருக்குமே தெரியும். என்னதான் இவர் படங்களுக்கு கதைகளை காப்பி அடிக்கிறார் என்ற விமர்சனங்கள் பல வந்தாலும், தன் வெற்றியின் மூலமாக அனைவரையும் வாயடைக்க செய்வார் அட்லீ. இந்நிலையில் இவர் பிகில் படத்தை அடுத்து பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து படம் இயக்க போவதாக தகவல் வெளியானது. இடையில் அவர் ஷாருக்கானை நேரில் சென்று சந்தித்தார் என்றும் கூறப்பட்டு வந்தது. பின்னர் இந்த படம் கைவிடப்பட்டது என்ற வதந்திகளும் பரவியது.

கட்டாயம் படிக்கவும்  சொந்தமாக புதிய துணிக்கடை திறந்த அறந்தாங்கி நிஷா

ஷாருக்கானுடன் கைகோர்க்கும் இயக்குனர் அட்லீ ! விவரம் உள்ளே 2

விளம்பரம்

இந்நிலையில் தற்போது அட்லீ பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து படம் இயக்க போவதாக உறுதியான தகவல் வெளியாகி உள்ளது. தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதானின் படப்பிடிப்பில் இருக்கும் ஷாருக்கான், அடுத்து அட்லீயுடன் சேர்ந்து படம் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஷாருக்கான் 2 கதாபாத்திரங்களில் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment