The Indian Times

Hindi யில் பேசிய தொகுப்பாளரை ட்ரோல் செய்த ஏ.ஆர்.ரகுமான் ! வைரல் வீடியோ

தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவிற்கே பெருமை சேர்த்த ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். இவரது பாடல்களுக்கு மயங்காத ஆட்களே இருக்க முடியாது. இந்நிலையில் தற்போது இவர் எழுதி தயாரித்து இசையமைத்த 99 சாங்ஸ் என்ற திரைப்படம் பற்றிய பேச்சு வைரலாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த 99 சாங்ஸ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பட குழுவினரோடு இயக்குனர் ஷங்கர் , கே.எஸ்.ரவிக்குமார் , கவுதம் மேனன் , விக்னேஷ் சிவன் , நடிகர் எஸ்.ஜே.சூர்யா , சிவகார்த்திகேயன் , இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா , அனிருத் , ஜி.வி.பிரகாஷ் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாறி மாறி பேசிக்கொண்டு இருந்தார். இந்நிலையில் திடீரென வெல்கம் செய்வதற்கு ஹிந்தியில் பேசினார். அதை பார்த்த ஏ.ஆர்.ரகுமான் “இந்தி?” என்று கேட்டு மேடையை விட்டு இறங்கி சென்றார். கீழே சென்ற பிறகு முதலிலேயே உங்களை தமிழில் மட்டும் தான பேச சொல்லி கூறினேன் என்று கேட்டார். அதற்கு அந்த தொகுப்பாளர் வெல்கம் செய்வதற்கு தான் பேசினேன் என்று கூறினார். அதற்கு ரகுமான் சரி பரவாயில்லை என்று சிறிது கொண்டு சென்று விட்டார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in