The Indian Times

வலிமை படத்தின் புதிய அப்டேட் ! தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்ட தகவல்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருக்கும் நடிகர் தல அஜித். தல அஜித்தின் அடுத்த படம் வலிமை மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். போனி கபூரின் தயாரிப்பில் இயக்குனர் எச். வினோத்தின் அதிரடி த்ரில்லரில் போலீஸ் அதிகாரியின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அஜித். இந்த படத்திற்காக இசை இயக்குனர் யுவன் சங்கர் ராஜா மற்றும் DOP நீரவ் ஷா ஆகியோரையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.படக்குழு சென்னை மற்றும் ஹைதராபாத்தின் ராமோஜி பிலிம் சிட்டி உள்ளிட்ட இடங்களில் முக்கியமான காட்சிகளை சூட் செய்துள்ளது.

Advertisement

இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா குமகொண்டா, யோகி பாபு, குர்பானி, புகாஜ், அச்சியுத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் இறுதிக்கட்ட போடப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பற்றிய தினசரி அப்டேட் கேட்டு கேட்டு சலித்திவிட்டனர். ஒரு கட்டத்தில் அஜித் அவர்கள் ரசிகர்கள் புதிய அப்டேட் வெளியிடும் வரை பொறுமையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்நிலையிலில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அப்டேட் வெளியானது.

Advertisement

இந்த படத்தின் First Look அஜித்தின் 50 வது பிறந்தநாளான மே ஒன்று அன்று வெளியாகும் என்ற தகவல் வெளியானது. இதை தொடர்ந்து இந்த பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை இந்தியாவில் சிறந்த போஸ்டர் டிசைனரான ராகுல் நந்தா தான் தயாரித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தை பற்றிய மற்றொரு தகவலை தயாரிப்பாளர் போனி கபூர் கூறியுள்ளார். இந்த படம் ஆக்ஷன் கலந்த குடும்ப படமாக இருக்கும் என்று கூறியுள்ளார். இதை கேட்ட அஜித் ரசிகர்கள் சந்தோசத்தில் மிதந்து கொண்டிருக்கின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in