The Indian Times

வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய தளபதி பட நடிகை ! வைரல் வீடியோ

தமிழ் சினிமாவில் காதல் கவிதை , என் சுவாச காற்றே , ஜோடி , நெஞ்சினிலே ஆகிய படங்களில் நடித்த நடிகை இஷா கோப்பிகர். இவர் ஒரு காலத்தில் தளபதி விஜயோடு நெஞ்சினிலே படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் இடம்பெற்ற தங்க நேரத்துக்கு தமிழ் நாட்ட எழுதி தரட்டுமா என்ற பாடல் மிக பெரிய வெற்றி பெற்றது. தற்போது இவர் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி உள்ள வீடியோ வைரலாகி வருகிறது. 5 வயதிலிருந்து 50 வயது வரை அனைவரையும் நடனமாட வைக்கும் குத்துப் பாடல் என்றால் அது மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல் தான்.

Advertisement

விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் அசத்தலான நடிப்பில் வெளி வந்த மாஸ்டர் திரைப்படம் எரிதிர்பார்காத அளவுக்கு வசூலை குவித்தது.கொரோன பாதிப்பின் காரணத்தால் படம் வெளியாக ஒரு வருடம் தாமதமானாலும் இந்த பாடல் முன்னதாகவே வெளியாகி அனைவரையும் கவர்ந்திழுத்தது.இது வரை தமிழ் சினிமாவில் எந்த பாடலும் இதனளவுக்கு ட்ரெண்ட் ஆனது கிடையாது. ஒரு வருடம் கடந்தும் இன்றும் பலர் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.

Advertisement

https://twitter.com/ishakonnects/status/1375677887039201280

சினிமா பிரபலங்கள் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை அனைவரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவிட்டுள்ளனர். மேலும் உலகமெங்கும் உள்ள பல கோடி மக்கள் இந்த பாடலுக்கு நடனமாடி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ல் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது தளபதியோடு நெஞ்சினிலே படத்தில் நடித்த இஷா கோப்பிகர் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in