The Indian Times

மகளை பங்கமாக கலாய்த்த VIJAYTV அர்ச்சனா

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் அர்ச்சனா. இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே.சின்னத்திரையில் எதாவது சாதிக்க வேண்டும் என வாய்ப்பு தேட தொடங்கியவர் அர்ச்சனா.1999 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகினார்.இதுவே இவரது முதல் தொலைக்காட்சி என்ட்ரி ஆகும்.பின்னர் அங்கிருந்து சன் டிவியில் வாய்ப்பு கிடைக்கவே தொகுப்பாளராக களம் இறங்கினார்.இவர் முதல் முதலாக தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி காமெடி டைம்.இந்த நிகழ்ச்சி இவருக்கு பெரும் வரவேற்பினை மக்களிடம் அளித்தது.இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

எல்லா தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் பணியாற்றி விட்டார்.தற்போது விஜய் தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு அசத்தினார்.அர்ச்சனா.இந்த நிகழ்ச்சி மூலம் இவர் பலராலும் அறியப்பட்டவர் ஆகினார் பெரும் வரவேற்பும் கிடைத்தது.இதனை தொடர்ந்து தொகுப்பாளராகவே தனது வாழ்க்கையை தொடங்கி இன்று வரை நடத்தி வருகிறார்.இவருக்கு அழகிய பெண் குழந்தை உள்ளது.அம்மாவை போல சுறுசுறுப்பான ஐவரும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அசத்தியுள்ளார்.மேலும் யூடியூப் சேனல்கள் வைத்தும் இருவரும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.இவர்களின் யுடியூப் சேனலுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது

Advertisement

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகளுடன் ரீல்ஸ் வீடியோ செய்து வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்,தற்போது தனது மகளுடன் சந்தானம் காமெடி வசனம் ஒன்றை பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் ரெண்டு பேரு நடிப்பும் சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் தற்போது பெருமளவு வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in