The Indian Times

கல்யாணத்துக்கு தயாராகிய CWC புகழ்…காதலியுடன் PHOTOSHOOT

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆகியவர் புகழ்.இந்த நிகழ்ச்சியில் இவர் செய்த நகைச்சுவை பலராலும் பேசப்பட்டு தற்போது கதாநாயகனாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.சினிமாவில் நடிக்க வேண்டும் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் சரி ஒரு ஓரமாக நின்று விட்டு செல்லவேண்டும் என சினிமா வாய்ப்பு தேடியவர் இன்று கதாநாயகனாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.இதற்கு முழு காரணம் அவரது கடின உழைப்பு ஆகும்.இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களுடன் அடிக்கும் லூட்டிகளுக்கு அளவே இல்லை ,இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

ஆரம்பத்தில் விஜய் டிவியில் கூட்டத்தில் ஒருவனாய் உள்நுழைந்த புகழ் பின்னர் தனது எதார்த்த நடிப்பு மற்றும் பேச்சுக்களால் மக்களை வெகுவாக கவர்ந்தார்.குறிப்பாக அவர் மட்டுமே தனியாக பேசக்கூடிய பெண் குரல் உண்டு அதை நிகழ்ச்சியில் பெண் வேடமிட்டு பேசி அனைவரது மனதினையும் கொள்ளைகொண்டார் புகழ்.பெண் வேடம் மட்டுமே தொடர்ச்சியாக அணிந்ததால் பல இன்னல்களை அவரது வாழ்க்கையில் சந்தித்துள்ளார்.தற்போது அவர் பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் பலனாய் சினிமாவில் இன்று நல்ல நிலைமையில் உள்ளார்

Advertisement

இவர் தற்போது பென்சி என்ற பெண்ணை காதலித்து வருகிறார்.விரைவில் இருவரும் திருமணம் செய்ய உள்ளனர்.இவர்கள் அடிக்கடி வெளியே செல்லும் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி புகழ் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.இவர்களின் திருமணம் எப்பொழுது என ரசிகர்கள் ஆவலாக காத்திருந்த நிலையில் தற்போது அதற்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார் புகழ்.தனது காதலியுடன் போட்டோஷூட் எடுத்து கல்யாணத்திற்கு தயாராகியுள்ளார்.இந்த புகைப்படத்தினை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விரைவில் என குறிப்பிட்டுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in