The Indian Times

PERFORMANCE-ல் 3 பட தனுஷை கண் முன் நிறுத்திய அமீர் பாவனி | BIGG BOSS JODIGAL

விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற டான்ஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.பிக் பாஸ் ஜோடிகள் முதல் சீசனில் பல பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.முதல் சீசனில் டைட்டிலை அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் இருவரும் அடித்து சென்றனர்.தற்போது சீசன் 2 நிகழ்ச்சியை மே 8 முதல் ஒளிபரப்பு செய்ய உள்ளது விஜய் டிவி.தற்போது இதற்கான ப்ரோமோ வீடியோவை அண்மையில் வெளியிட்டது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2ல் போட்டியாளராக பல பிக் பாஸ் நட்சத்திரங்கள் பிக் பாஸ் நட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர். அதன்படி போட்டியாளர்களாக, வேல்முருகன் மற்றும் இசைவாணி,ஐக்கி மற்றும் தேவ்,அபிஷேக் மற்றும் ஸ்ருதி ,ஹாரத்தி மற்றும் கணேஷ் ,சுஜா மற்றும் சிவகுமார் மற்றும் அமீர் மற்றும் பாவனி பல பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் பட்டய கிளப்பி வருகின்றனர்.போட்டியாளர்கள் தங்களால் முடிந்த அளவு தங்களது திறமையை வெளிக்கொண்டு வந்து நடுவர்களை நடனத்தினால் அசர வைத்து வருகின்றனர்

Advertisement

இந்த வார நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.இந்த வாரம் போட்டியாளர்கள் டென்ட் கொட்டா ரவுண்டில் நடனமாடியுள்ளனர்.ஒரு படத்தின் கதை மற்றும் பாடல்களை மையமாக வைத்து முழு நடனமும் அமைந்துள்ளது.இந்த சுற்றில் அமீரும் பாவணியும் 3 படத்தினை தேர்ந்தெடுத்து பிரமாதமாக நடித்து நடனம் ஆடி அசத்தியுள்ளார்கள்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,இந்த நடனத்தினை பார்ப்பதற்காகவே நாளை நிகழ்ச்சிக்காக காத்திருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்

https://www.youtube.com/watch?v=XZwlNllUnAA&ab_channel=VijayTelevision

Embed video credits : vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in