The Indian Times

இரவு பார்ட்டி புகைப்படத்தை பதிவிட்ட ஷிவானி நாராயணன் – வைரல்

பிரமாண்டமான முறையில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 4 ன் ஃபைனல் தொடர்ந்து இப்போது பிக் பாஸ் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. கடந்த மாதம் 17 தேதி முடிந்த இந்த பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. பல சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு அதை எல்லாத்தையுமே மறந்து விட்டு அந்த வீட்டில் இருந்து அனைத்து போட்டியாளர்களும் தங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப அங்கிருந்து வெளியேறி இருந்தனர்.

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ கடந்த 4 வருடங்களாக நடைபெற்று வருகிறது. ஆனால் எந்த சீசனும் எதிர்க்கொள்ளாத பல பிரச்சனைகளை இந்த சீசன் சந்தித்து இருந்தது. பாலா மற்றும் ஷிவானி இருவர் இடையேயான உறவு குறி்த்து பல தரப்பட்ட ரசிகர்களிடம் இருந்து விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு இருந்தது. அவரது தாயாரே வந்து அவரை திட்டும் அளவிற்கு இருந்தது.

Advertisement

இந்த நிலையில் பிக் பாஸ் கொண்டாட்டம் வரும் ஞாயிறு அன்று மதியம் நடைபெற உள்ள நிலையில். ஷிவானி பாலா இருவரும் நிற்கும் போஸ்ட் ஒன்று வெளியாகி இருக்கிறது. இது ஷிவானி ரசிகர்களின் மனதில் ஒரு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை பார்த்த ஷிவானி ரசிகர்கள் ஷிவானியை அவர் அம்மா சொன்னபடி அவரிடம் இருந்து விலகி இருந்தால் நல்லா இருக்கும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் பாலா ரசிகர்கள் தரப்பில் இது ரொம்ப நல்ல ஜோடி என்று பாராட்டி வருகின்றனர். இதனால் ஷிவானி யார் பக்கம் சாய்வது என்று குழப்பம் நிலையில் இருக்கிறார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in