The Indian Times

ஒரே படத்தில் நடித்து சினிமாவை விட்டு விலகிய நடிகர் அர்ஜுன் மகள் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ

நடிகர் அர்ஜுன் தமிழ்,தெலுங்கு சினிமாக்களில் கொடிகட்டி பறந்தவர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் நடித்த ஜென்டில்மேன் மற்றும் ஜெய்ஹிந்த் படங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.

இப்படத்தினை தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறக்க தொடங்கினார் அர்ஜுன்.பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவில் கொடுக்க தொடங்கினார்.

Advertisement

தற்போது கதாநாயகனாக நடிப்பதை நிறுத்திவிட்டு வில்லன் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்,இதில் இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் தந்தை போல சினிமாவில் சாதிக்க வேண்டும் என சினிமாவுக்குள் நுழைந்தவர்.

இவரின் முதல் படம் பட்டத்துயானை,இந்த படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்,இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.இப்படத்திற்கு பிறகு இவருக்கு பெரிதாக படவாய்ப்புகள் ஏதும் தமிழ் சினிமாவில் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தினை தொடர்ந்து இவர் பிரேமபரஹா என்ற கன்னட படத்தில் நடித்துள்ளார்.இப்படமும் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை.இதனால் தற்போது பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் உள்ளார்.

இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.ரசிகர்கள் அடடே அர்ஜுன் மகளா இது செம்ம கியூட்டாக இருக்கும் இவருக்கு ஏன் இப்பொது வாய்ப்பு கிடைக்கவில்லை என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in