The Indian Times

அஜித்தின் ரீல் மகள் அனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ

என்னை அறிந்தால் படத்தில் தல அஜித்திற்கு மகளாக நடித்து சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் அனிகா.இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.முதல் படத்திலேயே பலராலும் அறியப்பட்ட நட்சத்திரமாக மாறினார்.

இப்படத்தினை தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கு கடினமாக முயற்சியும் பயிற்சியும் செய்து வந்தார்.அதன்படி இவர் நடித்த மாம் எனும் குறும்படம் இணையத்தில் வெளியாகி பெரும் ஹிட் அடித்தது.இப்படி படிப்படியாக தனது திரைப்பயணத்தினை தொடங்கினார் அனிகா.

Advertisement

தல அஜித் விஸ்வாசம் படத்திலும் அவருக்கு மகளாக நடித்து அசத்தினார்.அனிகா தற்போது கதாநாயகியாகவும் நடிக்க தொடங்கியுள்ளார்.அதற்கான பட வேலைகள் நடைபெற்று வருகிறது.சிறுகுழந்தையாக இருந்த அனிகா தற்போது படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

மேலும் தொடர்ச்சியாக படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார் அனிகா.அண்மையில் இவருக்கு வெளியாகிய ஓ மை டார்லிங் என்ற படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

அடிக்கடி இவர் போட்டோஷூட் எடுத்து வெளியிடும் புகைப்படம் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.ரசிகர்கள் தங்களது முழு ஆதரவினையும் அனிகாவுக்கு வழங்கி வருகின்றனர்.அதன்படி இவர் தற்போது நடத்திய போட்டோஷூட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

தற்போது இவர் லேட்டஸ்ட் புகைப்படங்கள் பயங்கர ட்ரெண்ட் ஆகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் விஸ்வாசம் அனிகாவா இது அடடே அசத்துறாங்களே என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in