The Indian Times

இணையத்தில் வைரல் ஆகும் நடிகை அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

என்னை அறிந்தால் படத்தில் தல அஜித்திற்கு மகளாக நடித்து சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் அனிகா.இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.முதல் படத்திலேயே பலராலும் அறியப்பட்ட நட்சத்திரமாக மாறினார்.இப்படத்தினை தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கு கடினமாக முயற்சியும் பயிற்சியும் செய்து வந்தார்.அதன்படி இவர் நடித்த மாம் எனும் குறும்படம் இணையத்தில் வெளியாகி பெரும் ஹிட் அடித்தது.இப்படி படிப்படியாக தனது திரைப்பயணத்தினை தொடங்கினார் அனிகா.

Advertisement

தல அஜித் விஸ்வாசம் படத்திலும் அவருக்கு மகளாக நடித்து அசத்தினார்.அனிகா தற்போது கதாநாயகியாகவும் நடிக்க தொடங்கியுள்ளார்.அதற்கான பட வேலைகள் நடைபெற்று வருகிறது.சிறுகுழந்தையாக இருந்த அனிகா தற்போது படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.அடிக்கடி இவர் போட்டோஷூட் எடுத்து வெளியிடும் புகைப்படம் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.ரசிகர்கள் தங்களது முழு ஆதரவினையும் அனிகாவுக்கு வழங்கி வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.போஸ்டரில் அனிகாவின் பெயர் நந்தினி என உள்ளதால் படத்திற்காக அச்சடிக்கப்பட்ட போஸ்டராக இருக்கலாம் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இருப்பினும் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in