The Indian Times

வெளிநாட்டில் வெறித்தனமாக ஆட்டம் போட்ட குக் வித் கோமாளி ரவீனா

மெளன ராகம் 2ஆம் பாகம் சீரியலில் நடித்து பிரபலமாகியவர் ரவீனா. 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் நுழைந்தார்.அதை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய ராட்சசன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.இந்த கதாபாத்திரத்தில் நடித்ததில் இருந்து இவர் பெரிதும் பேசப்பட்டவர் ஆகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அதன்பின்னர் மெளன ராகம் 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு வரவே அதனை சரியாக பயன்படுத்தி நடித்து பிரபலமாகினார் ரவீனா. நடனத்தின் மேல் அதிக காதல் உள்ள இவர் Dance Jodi Dance 2.0 என்ற ஜீ தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அசத்தினார். ஜீ தமிழின் பூவே பூச்சூடவா என்ற நாடகத்தில் நடித்து சின்னத்திரையில் நடிகையாக அறிமுகம் ஆகினார். மௌனராகம் என்ற நாடகத்தில் நடித்துக்கொண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

Advertisement

இன்ஸ்டாகிராமில் இவர் ஆடும் நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பலர் இவரை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வருகின்றனர்.எதாவது பாடல் ட்ரெண்ட் ஆகிவிட்டது என்றால் நம்ம ரவீனா உடனே நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு விடுவார்.தற்போது இவர் ட்ரெண்டிங் பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்டு வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் ரவீனாவின் நடனத்தினை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.இந்த வீடியோ ரசிகர்களால் இன்ஸ்டாகிராமில் ஷேர் மற்றும் லைக்குகளை அள்ளிக்கொடுத்து இணையத்தில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in