The Indian Times

பாசத்திற்குரிய பாரதிராஜாவின் இளம்வயது புகைப்படங்கள் இதோ

தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் பாரதி ராஜா.பல அற்புதமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து தமிழ் சினிமாவின் தரத்தினை உயர்த்தியவர் இவர்.

நடிகர் கமல்ஹாசனை வைத்து 1977ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய படம் 16 வயதினிலே.இப்படத்தின் மூலம் தான் இயக்குனராக சினிமாவுக்குள் கால்தடம் பதித்தார் பாரதிராஜா.இப்படம் பெரும் வரவேற்பினை சினிமா ரசிகர்களிடம் இவருக்கு பெற்றுக்கொடுத்தது.

Advertisement

முதல் படத்திலேயே யாரும் எட்ட முடியாத உயரத்தினை அடைந்து முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தினை அடைந்தார் பாரதிராஜா.

இப்படத்தினை தொடர்ந்து கிழக்கே போகும் ரயில்,சிகப்பு ரோஜாக்கள் என பல தரமான படங்களை அளித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்ததால் ரசிகர்களால் பாரதிராஜா செல்லமாக இயக்குனர் இமயம் என அழைக்கப்பட்டார்.

இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் ஹிந்தி தெலுங்கிலும் படங்கள் இயக்கியுள்ளார்.முதுமை காரணமாக தற்போது படங்கள் இயக்க ஆர்வம் காட்டாத பாரதிராஜா படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார் பாரதிராஜா.அண்மையில் உடல்நிலை முடியாமல் இருந்த பாரதிராஜா அதிலிருந்து மீண்டும் வந்து நடிக்க தொடங்கியுள்ளார்.இதனால் இவரின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியை அடைந்துள்ளனர்.

தற்போது இவரின் இளம் வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in