The Indian Times

அப்பா முரளியுடன் ஆசையாக புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் அதர்வா

முன்னணி நடிகர் முரளியின் மகன் அதர்வா.தந்தையை போல சாதிக்க வேண்டும் என சினிமாவுக்குள் நுழைந்தார்,காத்தாடி விடும் சிறுவனாய் பானா காத்தாடி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆகி முதல் படத்திலேயே பட்டையை கிளப்பினார் அதர்வா.

இப்பட்ட்டத்தினை தொடர்ந்து பல நல்ல படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து தமிழ் சினிமாவில் நிரந்தர நடிகராக உருவெடுத்தார். ஈட்டி,சண்டிவீரன்,இமைக்கா நொடிகள் மற்றும் பரதேசி என பல வெற்றிப்படங்களை தமிழில் கொடுத்துள்ளவர்.

Advertisement

இவருக்கு கடந்த சில மாதங்கள் முன்பு வெளியாகிய பட்டத்து அரசன் படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை அதன்படி அண்மையில் நடித்து வெளியாகிய சில படங்கள் இவருக்கு தோல்வியை பெற்றுக்கொடுத்தது,

இதனால் மீண்டும் நல்ல படங்களை கொடுக்க முயற்சி செய்து வருகிறார் அதர்வா.மேலும் கதைகளையும் நன்கு உன்னிப்பாக கவனித்து கேட்டு நடித்து வருகிறாராம்.

தற்போது இவர் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்துள்ள நிறங்கள் மூன்று படத்தில் நடித்துள்ளார்.இவருக்கு இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுப்பதில் இவர் கில்லாடி,பல வித்தியாசமான கதைகளில் நடித்து தனக்கான ரசிகர்கள் கூட்டத்தினை வைத்துள்ளார் அதர்வா.

இவரின் தந்தை பிரபல நடிகர் முரளி, இவரும் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர்.

Advertisement

தற்போது தந்தை முரளியுடன் அதர்வா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in