The Indian Times

சரஸ்வதிக்காக மெக்கானிக் ஷாப்பை சொந்தமாக வாங்கிய தமிழ்… சந்தோஷத்தில் தமிழை செல்லமாக அடித்து விளையாடிய சரஸ்வதி.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த நாடகத்தினை மாபெரும் வெற்றியடைந்த சீரியல்கள் ஆன திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய இயக்குனர் குமரன் இயக்குகிறார்.இதுவே இதன் வெற்றிக்கு முதல் காரணம் ஆகும்.இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளரும் நடிகருமான தீபக் ஹீரோவாக நடித்து வருகிறார்,அதேபோல ஹீரோயினாக தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்து வருகிறார். இந்த நாடகத்தின் மூலம் இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தற்போது நாடகத்தில் தமிழ் கோதையை எதிர்த்து தேர்தலில் நிற்கிறார்.தேர்தல் முடிவுகளில் முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் தமிழை விட கோதை அதிக வாக்குகளில் முன்னிலையில் இருக்க,இறுதிக்கட்ட தேர்தல் முடிவுகளை அறிவிக்க வருகின்றனர்.இதனால் தமிழ் பெரும் பரபரப்பில் உள்ளார்,மேலும் ரசிகர்களும் பெரும் பரபரப்பில் யார் வெற்றிபெற போவது என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.தமிழ் 146 வாக்குகளை பெற்று கோதையை அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெறுகிறார்.

Advertisement

தற்போது தொடரின் ப்ரோமோ வெளியாகியுள்ளது,இதில் சரஸ்வதிக்கு தெரியாமலையே சரஸ்வதி வேலை செய்த மெக்கானிக் கடையை சரஸ்வதி பெயரில் வாங்கியுள்ளார் தமிழ்,இதுகுறித்து கேள்விப்பட்டதும் சந்தோஷத்தில் தமிழை பார்க்க வருகிறார் சரஸ்வதி மேலும் தமிழ் சரஸ்வதியிடம் இதனை மறைக்கவே செம்ம கடுப்பாகியுள்ளார்.மேலும் கணவரை செல்லமாக அடித்தும் உள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in