சினிமாவில் அறிமுகம் ஆகும் காமெடியன் சாம்ஸ் மகன்.. நடிகை அஞ்சலி படத்தில் அறிமுகம் ஆகும் யோஹன் சாம்ஸ்

தமிழ் சினிமாவில் பிரபல காமெடியனாக வலம் வருபவர் சாம்ஸ்.இவரின் நகைச்சுவைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தனது எதார்த்த பேச்சினால் பல ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் இவர்.அறை எண் 305ல் கடவுள் படத்தில் இவர் ஜாவா சுந்தரேசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.இந்த கதாபாத்திரத்திற்கு இன்றுவரை ரசிகர்கள் உள்ளனர்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இவர் 1998 ஆம் ஆண்டு காதல் மன்னன் என்ற படத்தில் மிக சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் பாக்கியா உடன் கோபி.. வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

சினிமாவில் அறிமுகம் ஆகும் காமெடியன் சாம்ஸ் மகன்.. நடிகை அஞ்சலி படத்தில் அறிமுகம் ஆகும் யோஹன் சாம்ஸ் 1

விளம்பரம்

இவர் பல படங்களில் தற்போது நடித்து வருகிறார்.மேலும் கதாநாயகனாகவும் நடிக்க தொடங்கியுள்ளார் சாம்ஸ். இவர் நடித்த பயணம்,இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்,தேசிங்கு ராஜா படங்கள் பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்ற படங்கள், இன்று வரைக்கும் இப்படத்தின் நகைச்சுவைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தற்போது இவர் மகன் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.இதனை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார் சாம்ஸ்

கட்டாயம் படிக்கவும்  Dhanush நடிக்கும் ராயன் படத்தின் First Promo வெளியாகியது

சினிமாவில் அறிமுகம் ஆகும் காமெடியன் சாம்ஸ் மகன்.. நடிகை அஞ்சலி படத்தில் அறிமுகம் ஆகும் யோஹன் சாம்ஸ் 2

விளம்பரம்

நடிகை அஞ்சலி நடிக்கும் FALL எனும் வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆகியுள்ளார் சாம்ஸ் மகன் யோஹன் சாம்ஸ். இந்த வெப் தொடர் விரைவில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது.இந்த அறிவிப்புக்கு சாம்ஸ் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை அவரது மகனுக்கு தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment