The Indian Times

உட்கார்ந்து பார்க்க முடியாத.. மொக்க படமா எடுத்துருக்காங்க.. AGENT கண்ணாயிரம் BLUE சட்டை மாறன் REVIEW

நடிகர் சந்தானம் சினிமாவில் சிறந்த நகைச்சுவை நடிகர்.இவர் நகைச்சுவைக்கு என பல ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இருப்பினும் காமெடியனாக இனி நடிக்க மாட்டேன் நடித்தால் ஹீரோ தான் என்று கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்,இதில் சில வெற்றிப்படங்கள் அமைந்தாலும்,சில தோல்வி படங்களும் அமைந்துள்ளது.அந்த வரிசையில் தற்போது சந்தானம் இயக்குனர் பீதா இயக்கத்தில் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் நடித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்படம் தெலுங்கில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த ஏஜென்ட் ஸ்ரீனிவாச ஆத்ரேயா என்ற படத்தின் ரீமேக் ஆகும்.இப்படத்தில் இவருடன் ரியா சுமன்,புகழ்,முனீஸ்காந்த் ,ரெடின் கிங்க்ஸ்லி ,இந்துமதி ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.ரசிகர்கள் ஆர்வமாக இப்படத்தினை பார்த்து வருகின்றனர்,தற்போது இப்படத்தினை BLUESATTAI மாறன் அவரது ஸ்டைலில் விமர்சனம் செய்துள்ளார்.

Advertisement

இந்த விமர்சன வீடியோவில் இவர் கூறியதாவது,உட்கார்ந்து பார்க்க முடியாதபடி மொக்க படமா எடுத்து வச்சிருக்காங்க,படத்துல காமெடியும் இருக்க கூடாது,கலகலப்பும் இருக்க கூடாதுன்னு சந்தானம் சொல்லிட்டாரு போல படம் ரொம்ப சீரியசாகி எந்திரிக்கவே முடியாம படம் கோமாவுக்கே போய்ட்டு.ஒரிஜினல் படத்துல இருந்து நல்ல மாத்தி ஒண்ணுத்துக்கும் ஆகாத படமா எடுத்து வச்சிருக்காங்க.

Embed video credits : Tamil Talkies

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in