வடிவேலுவின் நாய் சேகர் படத்தின் “பணக்காரன்” 2வது பாடல் வெளியாகியது

வடிவேலு தமிழ் சினிமாவை கலக்கி வரும் புயல் .இதனாலேயே இவருக்கு என்னமோ வைகைப்புயல் என பெயர் வைத்துள்ளார்கள் போல.இவரின் நகைச்சுவையை பார்த்தால் எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் ஓடிவிடும்.பல மக்களின் கவலையை போக்கிய வைத்தியர் இந்த வடிவேலு என்று கூறினால் மிகையாகாது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.காமெடியன் கதாநாயகன் என இரண்டிலும் சினிமாவை ஆட்டம் காண வைத்தவர் இவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை நாயகி மீனாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

வடிவேலுவின் நாய் சேகர் படத்தின் "பணக்காரன்" 2வது பாடல் வெளியாகியது 1

விளம்பரம்

என் தங்கை கல்யாணி என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த என் ராசாவின் மனசிலே திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து கவுண்டமணி மற்றும் செந்திலுடன் இணைந்து பல படங்கள் நடித்து மிகவும் பிரபலமாகி தனியாக நகைச்சுவை நடிகராக உருமாறி வலம் வர தொடங்கினார்.பல படங்கள் இவரின் நகைச்சுவைக்காகவே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.தற்போது சில ஆண்டுகளாக இயக்குனர் சங்கருக்கும் வடிவேலுக்கு இடையே இருந்த பிரச்சனைகளினால் படங்கள் நடிக்காமல் இருந்தார்

கட்டாயம் படிக்கவும்  PARTY-ல் குத்தாட்டம் போட்ட நடிகை சாய் பல்லவி

வடிவேலுவின் நாய் சேகர் படத்தின் "பணக்காரன்" 2வது பாடல் வெளியாகியது 2

விளம்பரம்

தற்போது இவர் தொடர்ந்து மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் லைக்கா நிறுவன தயாரிப்பில் நாய் சேகர் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.இப்படம் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாக உள்ளது.அண்மையில் இப்படத்தின் முதல் பாடலை வெளியிட்டது படக்குழு,இப்பாடல் நல்ல வரவேற்பினை பெற்றது.அதனை தொடர்ந்து இரண்டாவது பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு.பணக்காரன் என்ற இந்த பாடலை நடிகர் வடிவேலு தனது குரல் மற்றும் ஸ்டைலில் பாடியுள்ளார்.இப்பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அஜித் நடிக்கும் 63வது படத்தின் பெயர் வெளியாகியது

விளம்பரம்

Embed video credits : THINK MUSIC INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment