The Indian Times

மிடுக்கான POLICE-ஆக வந்து விஜய் சேதுபதி மிரட்டும் “DSP” TRAILER இதோ…

நடிகர் விஜய் சேதுபதி பல சினிமா ரசிகர்களை கவர்ந்த கலைஞன்.இவரின் நடிப்பு என்ற கலைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று தெற்கு வடக்கு கிழக்கு மேற்கு என நான்கு திசைகளிலும் நடிகனாக அசத்தி வரும் முன்னனி கலைஞன்.ஆரம்பத்தில் கூட்டத்தில் ஒருவனாய் வந்த விஜய் சேதுபதி இன்று அவரின் படத்தினை பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.கதாநாயகனாக இருந்தாலும் சரி வில்லனாக இருந்தாலும் சரி கொடுக்கும் கதாபாத்திரத்தினை உள்வாங்கி வெளுத்துக்கட்ட கூடிய திறமை உள்ளவர் இவர்.இந்த படம் ஓடாது என தெரிந்தும் அதில் நடித்தால் அந்த அறிமுக இயக்குனர் இயக்குனராக மாறிவிடுவார் என்று பல படங்களில் ஒப்புக்கொண்டு பிறரை இயக்குனராகவும் மாற்றியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய காத்து வாக்குல ரெண்டு காதல் படம் நல்ல வரவேற்பினை பெற்று 66 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது,இப்படத்தினை தொடர்ந்து விக்ரம் படத்தில் வில்லனாக நடித்து அசத்தி இன்று பலரின் மனதினையும் கவர்ந்துள்ளார்.கதாநாயகனாக மட்டும் இல்லாமல் வில்லனாகவும் நடித்து அசத்தி வருகிறார்.ரஜினி,கமல்ஹாசன் மற்றும் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்தும் மிரட்டிவிட்டார்.தற்பொழுது மலையாளம்,ஹிந்தி,தெலுங்கு என்ற மொழி படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார் விஜய் சேதுபதி.தெலுங்கில் புஷ்பா படத்தில் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இவர் தற்போது பிரபல இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் டிஎஸ்பி படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் கதாநாயகியாக அணுகிரீத்தி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் விஜய் டிவி புகழ்,சிங்கம் புலி ஆகியோர் நடித்துள்ளனர்.சன் பிக்சர் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.இப்படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது.இந்நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலெரை படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits : SUNTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in