The Indian Times

பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகை பூர்ணா மகன் பெயர் சூட்டும் விழா புகைப்படங்கள் இதோ

மலையாள நடிகையான பூர்ணா மஞ்சு போலொரு பெண்குட்டி என்ற மலையாள படத்தில் நடித்து 2004 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வந்த பூர்ணா தெலுங்கில் மஹாலக்ஷ்மி என்ற படத்தில் நடித்து அங்கும் நல்ல வரவேற்பினை பெற்றார்.

இறுதியாக பரத் நடிப்பில் வெளியாகிய முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.இதனை தொடர்ந்து மலையாளத்தினை போலவே தமிழிலும் படங்கள் தொடர்ந்து நடிக்க தொடங்கினார்.

Advertisement

பல தமிழில் பல வெற்றிப்படங்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் பூர்ணா.மலையாளம்,தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழிகளிலும் பல படங்கள் நடித்துள்ளார்.பல படங்களில் ஒப்பந்தமாகி தற்போது பிசியாக நடித்து வருகிறார்.

இவருக்கு அடுத்ததாக பிசாசு 2 படம் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.மேலும் இவர் நடிகையாக மட்டுமில்லாமல் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தினார்.இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் ஆகியது

இந்நிலையில் இவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார்.அதன்படி தற்போது நடிகை பூர்ணாவுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.மகனுடன் எடுத்த புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது மகனுக்கு பெயர் சூட்டும் விழா நடத்தியுள்ளார்,இந்த விழாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in