The Indian Times

நடிகர் பசுபதியோட இளம் வயது புகைப்படத்தை பாத்துருக்கீங்களா? இதோ அந்த புகைப்படம்

நம் தமிழ் சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகர்களுள் ஒருவர் நடிகர் பசுபதி. இவர் முதல் முதலில் 1999 ஆம் ஆண்டு வெளியான ஹவுஸ் புல் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு தூள் , அருள் , சுள்ளான் , மதுர போன்ற படங்களில் வில்லனாக கலக்கியுள்ளார். காலப்போக்கில் இவர் வெயில், மஜா , குசேலன் , அசுரன் போன்ற குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள்

மனதில் இடம்பிடித்தார். இவர் இறுதியாக தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த சாரப்பட்டா பரம்பரை படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் சமீபத்தில் ஓ.டி.டி யில் வெளியாகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Advertisement

இந்த படத்தில் ரங்கன் வாத்தியாராக நடித்த பசுபதி மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். எத்தனையோ படங்களில் பல விதமான கதாபாத்திரங்களில் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி உள்ளார் பசுபதி. இந்நிலையில் தற்போது இவருடைய இளமை கால புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளிவந்துள்ளது. அதில் சுருட்டை முடியோடு போஸ் கொடுக்கும் நடிகர் பசுபதியை நீங்களே பாருங்கள்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in