The Indian Times

சார்பட்டா பரம்பரை படத்தில் Re Entry கொடுத்த காதல் பட நடிகர்! இவர இந்த படத்துல கவனிச்சீங்களா?

பல இயக்குனர்கள் இன்றைய ரசிகர்களுக்கு ஏற்றாற்போல் போர் அடிக்காதவாறு படத்தை இயக்குகின்றனர். அந்த வகையில் தான் இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படம் மக்களுக்கு பிடித்த வண்ணமே இருக்கும். அவரது முதல் படமான அட்டக்கத்தி மூலம் அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்பு மெட்ராஸ், கபாளி, காலா என ஸ்டார்களை வைத்து படம் இயக்கினார். அந்த வகையில் நடிகர் ஆர்யாவை வைத்து தயாரித்த படம் தான் சார்பட்டா பரம்பரை.

Advertisement

சமீபத்தில் ஓடிடி தளமான அமேஸான் ப்ரைமில் வெளியிடப்பட்டது இத்திரைப்படம். பலரும் இந்த படத்தை தியேட்டரில் வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். அப்படி பல தரப்பட்ட மக்களிடையே பாஸிட்டிவ் ரிவியுவ்ஸ் பெற்று வருகிறது. நடிகர் ஆர்யாவுக்கும் இத்திரைப்படம் அவரது சினிமா வாழ்கையில் ஒரு முக்கிய படமாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். பல நட்சத்திர பட்டாளமே இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

Advertisement

பல நடிகர்களுக்கு இத்திரைப்படம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இப்படி பல நட்சத்திரங்கள், ஆர்ட்டிஸ்ட்டுகள் நடித்த இத்திரைப்படத்தில் காதல் திரைப்படத்தில் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்த இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்துள்ளார். முதலில் இவரை இந்த படத்தில் யாரும் பெரிதாக கவனிக்கவில்லை தற்போது , இவரது புகைப்படத்தை வைத்து காதல் பட நடிகர் என்று பல மீம்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in