The Indian Times

D43 First Look Announcement Teaser | Dhanush | Karthik Naren

Watch the video below இன்றைய தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக விளங்கும் நடிகர் தனுஷ். இவருக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது. இவரது படங்கள் திரைக்கு வந்தால் தியேட்டரே திருவிழா போல் இருக்கும். இவர் இறுதியாக நடித்த திரைப்படம் ஜகமே தந்திரம். நிறைய பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தாலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் மக்களிடையே பெரிய அளவிற்கு

வரவேற்பை பெறவில்லை. ஆனால் அதற்கு முன்பு வெளிவந்த கர்ணன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தனுஷ் ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்துக்கொண்டிருப்பது அசுரன் போல ஒரு அசுரர் வெற்றிக்காக தான். இந்நிலையில் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் D43 படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

இந்த படத்தை சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோஹனன் நடிக்கின்றார். தற்போது தனுஷ் ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக இந்த படத்தின் first look நாளை வெளியாகிறது என்ற தகவலை வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர். Watch the video below

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in