The Indian Times

நீயும் நானும் வேறே இல்லடா.. மகனுடன் மைதானத்தில் நடிகர் பிரபு தேவா

தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பல பன்முக திறமை கொண்டவர் பிரபு தேவா.இவர் கால் தடம் பதித்த அணைத்து துறைகளிலும் கலக்கினார்.தமிழ் சினிமாவில் இவர் இந்து என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு ஆனது கிடைக்கவில்லை ,இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இவர் நடித்த காதலன் திரைப்படம் பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றது.இப்படத்தின் ,மூலம் பிரபு தேவா அனைவராலும் அறியப்பட்டவர் ஆகினார்.தனது நடனத்தினால் பலரையும் இவரது ரசிகர் ஆக்கினார் பிரபு தேவா.

Advertisement

பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார்.மேலும் தெலுங்கு படத்தினை இயக்கி இயக்குனராகவும் மாறினார்.தமிழில் இவர் நடிகர் விஜயை வைத்து இயக்கிய போக்கிரி படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.இதன்மூலம் இயக்குனர் ஆகவும் தமிழக மக்களின் மனதில் நீங்காத இடத்தினை பிடித்தார்.இப்படத்தினை தொடர்ந்து பல படங்களை இயக்கியுள்ளார் பிரபு தேவா.இவர் தமிழில் மட்டும் இல்லாமல் ஹிந்தியிலும் இயக்குனராக அசத்தியவர்.கடந்த ஆண்டு சல்மான் கானை வைத்து ராதே என்ற படத்தினை இயக்கி இருந்தார்.இப்படம் ஹிந்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

Advertisement

தற்போது கதாநாயகனாக சினிமாவை கலக்கி வருகிறார்.இந்நிலையில் இவர் அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியை காண மகனுடன் சென்றுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பிரபுதேவா மகனா இது அப்படியே அச்சு அசல் பிரபுதேவா மாதிரியே இருக்காரே என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் .

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in