The Indian Times

மீண்டும் ACTION காட்டி அதிரடியில் மிரட்டும் விமல்.. குலசாமி ட்ரைலர் வெளியாகியது

கில்லி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் விமல். ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த விமல் கதாநாயகனாக பசங்க படத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த களவாணி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.இப்படத்தினை தொடர்ந்து முன்னணி நடிகராக உருவெடுத்தார் விமல். குலசாமி ட்ரைலர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் நடித்த வாகை சூடவா படத்திற்கு சிறந்த நடிகர் என்ற தமிழக விருதினை பெற்றார் விமல்.இந்நிலையில் பல வெற்றிப்படங்களை கொடுத்து மேல வந்த விமலுக்கு படங்கள் சரியாக ஓடாமல் பெரும் சரிவினை கொடுக்க தொடங்கியது.இதில் இருந்து மீண்டும் வர விமல் போராடியும் அனைத்தும் தோல்வியில் முடிந்தது,இருப்பினும் மனம் தளராமல் மீண்டும் படங்களை நடித்து வருகிறார்,அந்த வரிசையில் இவர் அண்மையில் நடித்த விலங்கு வெப் சீரிஸ் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Advertisement

தற்போது இவர் நடிகர் குட்டிப்புலி சரவணன் சக்தி இயக்கத்தில் குலசாமி படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வசனம் எழுதியுள்ளார்.ஜீ ஸ்டார் மஹாலிங்கம் என்பவர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.விரைவில் இப்படம் வெளியாக உள்ளதை தொடர்ந்து ட்ரைலரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படம் விமலுக்கு வெற்றிப்படமாக அமைய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : MRT MUSIC

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in