The Indian Times

தமிழகத்தில் ஒரு கிராமத்திற்கே சொந்த செலவில் குடிநீர் வழங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

சினிமா உலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழில் உண்டு.இவர் நடிப்பு ஸ்டைல் என எல்லாவற்றிற்குமே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை உலகளவு சேர்த்தவர்.வில்லனாகவும்,கதாநாயகனாகவும் தமிழ் சினிமாவை கலக்கியவர் ரஜினிகாந்த். இவரின் படம் வெளியாகும் நாளை இவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது வழக்கம். பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிக்குப்பம் கிராமத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தந்தை மற்றும் தாயார் வாழ்ந்து வந்துள்ளனர்.இன்றும் அந்த கிராமத்தில் ரஜினி உறவினர்கள் வாழ்ந்து வருகின்றனர்.ரஜினி அண்ணன் மட்டும் கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகளில் கலந்துகொள்வார்.இந்நிலையில் ரஜினி இந்த கிராமத்தில் பல ஏக்கர் நிலைத்தினை வாங்கி தனது தந்தை மற்றும் தாயான ரானோஜிராவ் – ராம்பாய் அவர்களுக்கு சிலை அமைத்துள்ளார்.

Advertisement

அதுமட்டுமின்றில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி அங்குள்ள மக்களுக்கு குழாய் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும் வழங்கி வருகிறார்.மேலும் இங்கு மக்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கும் தனியாக நீர் வழங்கப்பட்டு வருகிறது.ரஜினிகாந்தின் அண்ணன் தான் தற்போது இந்த இடத்தினை பராமரித்து வருகிறார்.இங்கு நடப்பதை வீடியோவாக எடுத்து ரஜினிக்கு அனுப்பி தகவல் பரிமாற்றிக்கொள்வதாக கூறியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in