The Indian Times

APJ அப்துல் கலாமிற்காக மரக்கன்றுகளை நட்டிய நடிகர் விஷால்

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆகியவர் நடிகர் விஷால்.இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைத்தது.

முதல் படமே மாபெரும் ஹிட் என்பதால் அடுத்தடுத்து தமிழில் பல படவாய்ப்புகள் விஷாலின் கதவை தட்டியது.இதன்மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார்.

Advertisement

சண்டக்கோழி,திமிரு என வரிசையாக வெற்றிப்படங்களை இறக்கினார்.அறிமுகம் ஆகி முதல் மூன்று படங்களையும் ஹிட் கொடுத்த ஒரே நடிகர் விஷால்.

நடிகர்,தயாரிப்பாளர் தமிழ் சினிமாவை கலக்குபவர் விஷால் மேலும் இயக்குனராகவும் அவதாரம் எடுத்து துப்பறிவாளன் 2ஆம் பாகத்தினை இயக்கியுள்ளார்.இப்படம் விரைவில் வெளிவர உள்ளது.

இதனை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மலையாளத்தில் வில்லன் படத்தில் மோகன் லாலுக்கு வில்லனாக நடித்து அசத்தினார்.கடந்த முறை வெளியாகிய வாகை சூட வா மற்றும் லத்தி படம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றது.

இவருக்கு அடுத்ததாக மார்க் ஆண்டனி படம் வெளியாக உள்ளது,அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது.

தற்போது நடிகர் விஷால் APJ அப்துல் கலாம் நினைவு நாளுக்கு மரக்கன்றுகள் நட்டியுள்ளார்,இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in