The Indian Times

காராத்தேயில் BLACK BELT வாங்கி அசரவிட்ட இறுதிச்சுற்று பட கதாநாயகி ரித்திகா சிங்

இறுதி சுற்று படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் ரித்திகா சிங்.தனது முதல் படத்திலேயே அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவெடுத்தார் ரித்திகா.

இதனை தொடர்ந்து ஹிந்தி மற்றும் தெலுங்கிலும் படங்கள் நடித்துள்ளார்.இவர் தமிழில் இறுதியாக நடித்த ஓ மை கடவுளே படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

Advertisement

இந்நிலையில் இவர் தமிழில் அடுத்தடுத்து படங்களில் நடித்துள்ளார்,இப்படம் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாக இருக்கிறது.அதன்படி பாக்ஸர்,பிச்சைக்காரன் 2,வனங்காமுடி மற்றும் கொலை ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.அண்மையில் ரித்திகா சிங் டேய் என்ற இசை ஆல்பம் ஒன்றில் நடித்திருந்தார்.

இந்த ஆல்பம் பாடல் மற்றும் இவரின் நடனம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை தொடர்ந்து இவரது ரசிகர்கள் இவரை மீண்டும் வெள்ளித்திரையில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் நடிகை ரித்திகா சிங்,அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது இவர் கராத்தேயில் பட்டம் வாங்கியுள்ளார்,இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in