The Indian Times

சூர்யவம்சம் குழந்தை நட்சத்திரம் ஹேமலதா மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்

1995 ஆம் ஆண்டு பாஷா படத்தில் ரகுவரன் மகளாக நடித்து குழந்தை நட்ச்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகை ஹேமலதா.

இப்படத்தினை தொடர்ந்து சூரியவம்சம் படத்தில் சரத்குமார் மகனாக நடித்து நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றார்.தற்போதுவரை இப்படத்தில் இவரின் நடிப்புக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

Advertisement

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்தப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார் ஹேமலதா.

மேலும் சீரியலிலும் நடிக்க தொடங்கி நல்ல வரவேற்பினை பெற்றார்.

அஜித்தின் ஜி படத்திலும் விஜயின் மதுரை படத்திலும் நடித்து அசத்தியுள்ளார்.

இவர் சினிமாவில் இறுதியாக நடித்த படம் 2006 ஆம் ஆண்டு வெளியாகிய அடைக்கலம் படம்தான்.இப்படத்தினை தொடர்ந்து இவர் படங்களில் நடிப்பதில் இருந்து விலகினார்.

தற்போது இவருக்கு திருமணம் ஆகி பெண் குழந்தை உள்ளது.இவர் தனது மகளின் 3வது பிறந்தநாளை கொண்டாடி வெளியிட்டு இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in