The Indian Times

வெளிநாட்டில் குடும்பத்துடன் இயக்குனர் வெற்றிமாறன்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன்.இவருக்கு பெயரில் மட்டுமில்லை இவர் எடுக்கும் படங்களிலும் வெற்றி தான்.தொடர்ந்து தரமான கதைகளை இயக்கி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

குறைந்த அளவு படங்கள் இயக்கி இருந்தாலும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர் ஆகியுள்ளார்.வெற்றிமாறன்.இவர் நடிகர் தனுஷை வைத்து இயக்கிய படம் அசுரன்.

Advertisement

இப்படம் பெரும் ஹிட் அடித்தது.இப்படம் வெளியாகி 3 வருடங்கள் கழித்து தற்போது நடிகர் சூரியை வைத்து விடுதலை படத்தினை இயக்கியுள்ளார்.

கதாநாயகியாக இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் தங்கை பவானி ஸ்ரீ நடித்துள்ளார்.விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இளையராஜா இசையமைத்துள்ளார்.மேலும் இப்படத்தில் கவுதம் மேனன்,சேத்தன் என பல நடிகர்களும் நடித்துள்ளனர்.இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இப்படம் தற்போது முதல் பாகம் மட்டும் வெளியாகியுள்ளது.

படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்புகளையும் கருத்துகளையும் பெற்று வருகிறது.

தற்போது இவர் குடும்பத்துடன் வெளிநாடு சென்றுள்ளார்.அப்பொழுது எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in