The Indian Times

மகளின் பள்ளி விளையாட்டு போட்டியில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா ஜோதிகா

பிரபல பழம்பெரும் நடிகர் சிவகுமார் அவர்களின் மகன் சூர்யா.தமிழ் சினிமாவில் உச்சத்தில் கொடிகட்டி பறக்கும் நடிகர்களில் இவர் ஒருவர். இவர் தனது நடிப்பால் பல ரசிகர்களையும் தனது வசம் இழுத்துள்ளார்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ்,மலையாள சினிமாவில் உள்ளது.தமிழ் சினிமாவில் கிடைக்கும் அதே வரவேற்பு மலையாள சினிமாவில் கிடைக்கும் நடிகர்களில் இவர் ஒருவர் .

நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நுழைந்தவர் சூர்யா.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
தொடர்ந்து முயற்சி செய்து வந்த அவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் நந்தா படத்தில் நடிகர் சூர்யா நடித்து தனக்கான வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொண்டார் .

Advertisement

தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் 42வது படத்தில் நடித்து இருக்கிறார்.இப்படம் 10 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.மேலும் 3டியில் இப்படம் வெளியாக உள்ளது.தேவி ஸ்ரீபிரசாத் இசையில்,ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தினை தயாரித்து வருகிறது.சூர்யாவுக்கு கதாநாயகியாக திஷா பட்டாணி இப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.தற்போது இவர் மனைவி ஜோதிகா உடன் குழந்தைகள் பள்ளி விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டுள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in