The Indian Times

இளமை திரும்புதே… நடிகை சிம்ரனின் கியூட்டான புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை சிம்ரன்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து சினிமாவை கலக்கியவர்.

1997 ஆம் ஆண்டு இயக்குனர் சபாபதி இயக்கத்தில் வெளியாகிய வி ஐ பி படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

Advertisement

இப்படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஒன்ஸ்மோர் படத்தில் நடித்து அசத்தினார்.அஜித்க்குமாருக்கு இவர் ஜோடியாக நடித்த வாலி திரைப்படம் பெரும் வரவேற்பினை இவருக்கு பெற்றுக்கொடுத்தது.

இதன்மூலம் தொடர்ந்து தமிழ் படங்களை நடித்து முன்னணி நடிகையாக உருவாகினார்.

தற்போது வயது காரணத்தினால் கதாநாயகியாக சினிமாவில் நடிக்காமல் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.இவர் தமிழ் மொழி சினிமாவில் மட்டுமில்லாமல் மலையாளம்,தெலுங்கு மட்டும் ஹிந்தி சினிமாக்களிலும் நடித்து அசத்தி இருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தி வரும் சிம்ரன் நல்ல கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அண்மையில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக மஹான் படத்தில் நடித்து அசத்தினார்.இப்படம் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது.தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in