The Indian Times

ஸ்ருதிஹாசன் உடன் IPL பார்க்க வந்த லோகேஷ் கனகராஜ்.. வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.மாநகரம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் களம் இறங்கி.கைதி மூலம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றார் லோகேஷ்.அதனை தொடர்ந்து தளபதி விஜய் வைத்து மாஸ்டர் படத்தினை இயக்கி நல்ல வரவேற்பு பெற்றார்.

இவர் இயக்கி 3 படங்களும் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.உலகநாயகனின் தீவிர ரசிகர் ஆன லோகேஷ் உலகநாயகனை வைத்து படம் எடுக்க முடிவு செய்து அவருக்காக விக்ரம் கதையினை தயார் செய்து,கமல்ஹாசனிடம் கூறவே கதை பிடித்த கமல் இதனை நானே தயாரிக்கிறேன் என விக்ரம் ஆரம்பமாகியது.

Advertisement

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து இனிமேல் என்ற மியூசிக் ஆல்பத்தில் நடித்துள்ளார்.இந்த பாடலின் ப்ரோமோ அண்மையில் வெளியாகியுள்ளது. தற்போது இவர் ஸ்ருதிஹாசன் உடன் நேற்று நடைபெற்ற கிரிக்கெட் ஆட்டத்தை காண வருகை தந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in