The Indian Times

Uncle படம் சூப்பர்…மணிரத்தினத்தினை கட்டிப்பிடித்து வாழ்த்துக்கள் கூறிய ஐஸ்வர்யா ராய் மகள்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மணிரத்தினம். தரமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்துள்ளார்.மற்ற இயக்குனர்களை விட இவரது இயக்கம் சற்று வித்தியாசமாகவும் தனியாகவும் இருக்கும் என்பதால் இவரின் படத்திற்கு ரசிகர்கள் ஏராளம் பேர் உள்ளனர்.தமிழில் இவர் முதன் முதலாக இயக்கிய படம் பகல் நிலவு.இப்படத்தில் நடிகர் முரளி,நடிகை ரேவதி ஆகியோர் நடித்திருந்தனர்.இப்படம் 1985 ஆம் ஆண்டு வெளியாகியது.இவருக்கு தமிழ் சினிமாவில் இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றுக்கொடுத்த படம் என்றால் அது மோகன் வைத்து இவர் இயக்கிய மௌனராகம்.அன்று ஆரம்பித்த வெற்றி தளபதி,ரோஜா ,நாயகன்,பம்பாய் என வரிசையாக வெற்றிபடங்களை கொடுத்து தமிழ் சினிமாவை கலக்கினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

மணிரத்தினத்தின் நீண்ட நாள் கனவு பொன்னியின் செல்வவன்.தற்போது இப்படத்தினை விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,த்ரிஷா,ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயராம் என பலரையும் நடிக்க வைத்து சோழர்களின் பிரம்மாண்ட காவியத்தினை உருவாக்கியுள்ளார் மணிரத்தினம்.லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இப்படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.

Advertisement

இப்படத்தினை அண்மையில் படக்குழு சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் கண்டுள்ளது.இப்படத்தினை பார்த்த ஐஸ்வர்யா ராய் மகள் இயக்குனர் மணிரத்தினத்தினை கட்டிப்பிடித்து படம் நன்றாக உள்ளதாக கூறி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in