The Indian Times

மீண்டும் வந்த ரட்சகன் நாகர்ஜுனா…. அனல்பறக்க வெளியாகிய இரட்சன் TRAILER இதோ

நடிகர் நாகர்ஜூனாவுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரை அதிகம் பிடிக்கும் குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களுக்கு. காரணம் இவர் நடிப்பில் வெளியாகிய ரட்சகன் படம் மாபெரும் வெற்றியை தமிழ் மொழியில் பெற்றது.இப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் தெலுங்கு நடிகராக இருந்தாலும் தமிழ் ரசிகர்களின் மனதினை கவர்ந்தார்.இருப்பினும் இப்படத்திற்கு பிறகு நாகர்ஜுனா தமிழ் படங்களில் நடிக்கவில்லை நீண்ட இடைவெளிக்கு பிறகு பயணங்கள் படத்தில் நடித்திருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் மகன்கள் நடிக்க வந்தும் தற்போதுவரை தமிழ் சினிமாவில் ஆக்ஷ்ன் ஹீரோவாக பட்டையை கிளப்பி வருகிறார் நாகர்ஜுனா. நடிகர் கார்த்தியுடன் இவர் நடித்த தோழா படத்திற்கும் தமிழில் பெரும் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நாகர்ஜுனா தற்போது இரட்சன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை இயக்குனர் பிரவீன் இயக்கத்தில் நடித்துள்ளார்.

Advertisement

இப்படம் தமிழில் வெளியாக உள்ளது.தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. நாகர்ஜுனா ரசிகர்கள் படம் வெற்றிபெற தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.ட்ரைலரில் நாகர்ஜுனா அதிரடி காண்பித்து அசத்தியுள்ளார்.இதனால் ரசிகர்களுக்கு ட்ரைலர் அதிகம் பிடித்துவிட்டது.இப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது

Embed video credits : Sony Music

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in