The Indian Times

இயக்குனர் ஆகும் தளபதி மகன்.. ஆனால் HERO அப்பா இல்லையாம்.. இந்த ஹீரோவாம்

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அது தளபதி விஜய் மட்டும் தான்.இவர் நடித்த அனைத்து படங்களும் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்த அளவிற்கு தளபதி விஜய் ரசிகர்கள் அவரை நேசித்து வருகின்றனர்.பல போராட்டங்கள் விமர்சனங்களை சந்தித்து எதிலும் விட்டுக்கொடுக்காமல் பின்வாங்காமல் தொடர்ந்து போராடி இன்று இவ்வளவு பெரிய இடத்தினை அடைந்துள்ளார்.

Advertisement

அண்மையில் சன் பிக்சர் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி நடிப்பில் உருவாகிய பீஸ்ட் படம் எதிர்பார்த்த வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை.இதனால் தனது அடுத்த படத்தில் உஷாராக நடித்து வருகிறார் விஜய்.இவரின் 66வது படத்தினை தோழா படத்தினை இயக்கிய வம்சி இயக்கி வருகிறார்.வாரிசு என இப்படத்திர்ற்கு படக்குழு பெயரிட்டுள்ளது.இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்து வருகிறார்.மேலும் சரத்குமார் ,ஷியாம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.அண்மையில் இப்படத்தின் பெயர் மற்றும் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Advertisement

இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.தளபதி விஜய்க்கு ஜேசன் என்ற மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.ஜேசன் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தும் நடிக்காமல் இயக்குனராக வேண்டும் என்ற குறிக்கோளில் சினிமா சார்ந்த படிப்பு மற்றும் ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறார்.தற்போது விஜய் மகன் ஜேசன் குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளார் அவரது தாத்தா SA சந்திரசேகர்.அதன்படி ஜேசன் இயக்குனராக விரைவில் களம் இறங்குவார் என்றும் மேலும் அவர் விஜயை வைத்து படம் இயக்கவில்லை முதல் படம் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in