The Indian Times

வெற்றிமாறன் பேசுனதை இயக்குனரிடம் போய் கேளுங்க… சரத்குமார் ஆவேசம்

நடிகர் சரத்குமார் 90 களில் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் .பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு அளித்தவர்.ஆரம்பத்தில் வில்லனாக வந்து பின்னர் ஹீரோவாக நடித்து அசத்தி மக்களை கவர்ந்தார்.வில்லன் கதாநாயகன் என இரண்டிலும் பட்டையை கிளப்பி சினிமாவையே அசத்தினார்.1990 ஆம் ஆண்டு புலன் விசாரணை என்ற படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் சரத்குமார்.தனது கடின முயற்சியினால் கிடைக்கும் வேடங்களில் நடித்து பின்னர் கதாநாயகனாக நடித்து முன்னணி நடிகராக உருவெடுத்தார் சரத்குமார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இவர் நடித்த சூரியன் படம் இவருக்கு நல்ல வரவேற்பினை சினிமாவில் பெற்றுத்தந்தது.மேலும் அதனை தொடர்ந்து மூவேந்தர் சூர்யவம்சம் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவையே ஒரு கலக்கு கலக்கியவர்.தற்போது சினிமாவில் மட்டுமில்லாமல் சொந்தமாக கட்சி வைத்து அரசியலிலும் கால் தடம் பதித்து அசத்தி வருகிறார்.தற்போதும் தொடர்ந்து வெப் சீரிஸ் மற்றும் படங்களில் நடித்து வருகிறார்.முதல் முறையாக தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். காஞ்சனா படத்தில் திருநங்கையாக நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார்

Advertisement

தற்போது தொடர்ந்து படங்களில் வரிசையாக நடித்து வருகிறார்.அண்மையில் இவர் நடிப்பில் பொன்னியின் செல்வன் படம் வெளியாகி இருந்தது,இப்படத்தில் சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக நடித்திருந்தார்.இன்று இவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்பொழுது வெற்றிமாறன் பேசியது குறித்து கருத்து கேட்கப்பட்டது,உடனே கடுப்பாகிய சரத்குமார் இதெல்லாம் என்னிடம் கேட்காதீங்க இயக்குனரிடம் சென்று கேளுங்கள் என கொந்தளித்துள்ளார்.இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Embed video credits : Thanthi Tv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in