The Indian Times

நல்லா சாமி கும்பிட்டுக்கோடா … மகன்களுடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய ஐஸ்வர்யா ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தந்தையை போல சினிமாவில் நடிக்காமல் 3 படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர்.இப்படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.முதல் படத்திலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று முன்னணி இயக்குனராக உருவெடுத்தார் ஐஸ்வர்யா.இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒய் திஸ் கொலைவெறிடி பாடல் உலகம் முழுவதும் பட்டிதொட்டி எங்கும் பரவியது.இப்படத்தினை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிகர் கவுதம் கார்த்திகை வைத்து வை ராஜா வை என்ற திரை படத்தினை இயக்கினார்.

Advertisement

தமிழ் சினிமாவில் இரண்டு படங்களை மட்டுமே இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா.இப்படத்திற்கு பிறகு இவர் குடும்ப வாழ்க்கையினை முழுவதுமாக கவனித்துக்கொண்டதால் படம் இயக்கவில்லை.சினிமாவில் இயக்கத்தில் நீண்ட இடைவெளியை இவர் விட்டார்.தற்போது முன்னாள் கணவர் தனுஷ் உடன் விவாகரத்து ஆன நிலையில் யோகா மற்றும் உடற்பயிற்சியில் இறங்கியுள்ளார்.அண்மையில் இவர் இயக்கிய ஆல்பம் வீடியோ நல்ல வரவேற்பினை பெற்றது.தற்போது மீண்டும் படம் இயக்க தொடங்கியுள்ளார்.

Advertisement

தந்தையை வைத்து லால் சலாம் என்ற படத்தினை இயக்கி வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வீட்டில் மகன்களுடன் கொண்டாடியுள்ளார் மேலும் படப்பிடிப்பில் அனைவருக்கும் உணவளித்து ,மகிழ்ந்துள்ளார்.இந்த புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தில் ரசிகர்கள் அவருக்கு தங்களது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in