The Indian Times

ஏஆர் ரஹ்மான் குரலில் வெளியாகியது பொன்னியின் செல்வன் ANTHEM….

தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.காரணம் தமிழர்களின் வீரத்தினை உலகம் முழுவதும் தெரியப்படுத்த போவது என்பதால்.மேலும் பல மொழி சினிமாக்களும் ஆயிரம் கோடி வசூலை செய்து வரும் நிலையில் இப்படமும் ஆயிரம் கோடி வசூலை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.இப்படத்தினை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.படத்தில் கார்த்தி,விக்ரம்,ஜெயம்ரவி ,பிரபு,ஜெயராம்,ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது.மேலும் ஒரே நாளில் உலகம் முழுவதும் சுமார் 80 கோடி வரை வசூல் செய்துள்ளது.இப்படத்தின் இரண்டாம் பாகமும் ஏற்கனவே எடுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.ஒரே செலவில் கையுடன் படக்குழு இரண்டு படங்களையும் எடுத்து முடித்து.தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளது படக்குழு.இது ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாகத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகியுள்ளது.இரண்டும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்நிலையில் இப்படத்திற்காக ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள சிறப்பு பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு.இப்பாடல் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.ஏஆர் ரஹ்மான் குரலில் இப்பாடல் வேறெலெவெலில் இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : TIPS TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in