சூர்யா 42வது படத்தின் டைட்டில் இணையத்தில் லீக்… பெயரே சும்மா அனல் பறக்கே

பிரபல பழம்பெரும் நடிகர் சிவகுமார் அவர்களின் மகன் சூர்யா.தமிழ் சினிமாவில் உச்சத்தில் கொடிகட்டி பறக்கும் நடிகர்களில் இவர் ஒருவர். இவர் தனது நடிப்பால் பல ரசிகர்களையும் தனது வசம் இழுத்துள்ளார்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ்,மலையாள சினிமாவில் உள்ளது.தமிழ் சினிமாவில் கிடைக்கும் அதே வரவேற்பு மலையாள சினிமாவில் கிடைக்கும் நடிகர்களில் இவர் ஒருவர் .நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நுழைந்தவர் சூர்யா.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.தொடர்ந்து முயற்சி செய்து வந்த அவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் நந்தா படத்தில் நடிகர் சூர்யா நடித்து தனக்கான வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொண்டார் .

கட்டாயம் படிக்கவும்  அமெரிக்காவில் செட்டில் ஆகிய நாயகி சீரியல் ஹீரோயின் வித்யா பிரதீப்

சூர்யா 42வது படத்தின் டைட்டில் இணையத்தில் லீக்... பெயரே சும்மா அனல் பறக்கே 1

விளம்பரம்

தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் 42வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் 10 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் 3டியில் இப்படம் வெளியாக உள்ளது.தேவி ஸ்ரீபிரசாத் இசையில்,ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க உள்ளது.மிகப்பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது.இப்படத்தின் பெயர் மற்றும் ரிலீஸ் தேதியை படக்குழு நாளை காலை 9 மணிக்கு அறிவிக்க உள்ளதாக அறிக்கை வெளியிட்டு இருந்தது.

கட்டாயம் படிக்கவும்  தங்கலான் படத்தின் மினிக்கி மினிக்கி பாடல் வெளியாகியது

சூர்யா 42வது படத்தின் டைட்டில் இணையத்தில் லீக்... பெயரே சும்மா அனல் பறக்கே 2

விளம்பரம்

இந்நிலையில் இப்படத்தின் பெயர் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.இப்படத்திற்கு படக்குழு கங்குவா என பெயரிட்டுள்ளது.சென்சாருக்கு சென்ற டீசர் விண்ணப்பத்தில் இருந்து இப்படத்தின் பெயர் வெளியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பெயர் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.இருந்தும் இது அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை என்பதால் நாளை பொறுத்திருந்து படத்தின் பெயரை காணலாம் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment