The Indian Times

தோனியை தல என கூறிய குஷ்பு மேல் காட்டமாகிய அஜித் ரசிகர்கள்

1988 ஆம் ஆண்டு ரஜினி மற்றும் பிரபு நடிப்பில் வெளியாகிய தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார் குஷ்பு.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தமிழில் மிக பெரிய நடிகையாக உச்சம் தொட்டார்.தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து சினிமாவையே அசத்தினார்.பல முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்து அசத்தினார் குஷ்பு.தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம்,தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் நடிகையாக நடித்து அசத்தியுள்ளார் குஷ்பு. ரசிகர்களால் முதல் முறையாக கோவில்கட்டப்பட்ட நடிகை குஷ்பு ஆவார்.

Advertisement

பின்னர் இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையை கவனிக்க தொடங்கினார்.எந்த அளவிற்கு சினிமாவில் உச்சம் தொட்டாரோ அந்த அளவிற்கு சினிமாவில் இருந்து விலகினார்.இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.இதில் முதல் மகள் விரைவில் சினிமாவில் நடிக்க உள்ளார்.குஷ்பு வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் சில நாடகங்களில் நடித்து வந்தார்.தற்போது இவர் மைக் மோகன் நடிக்கும் ஹரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் மேலும் தளபதி 66 படமான வாரிசு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் குஷ்பு.இப்படி சில தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்

Advertisement

இந்நிலையில் இவர் அண்மையில் கிரிக்கெட் வீரர் தோனியை சந்தித்துள்ளார்.மேலும் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு தல என கூறியுள்ளார்.இதனால் கடுப்பாகிய ரசிகர்கள் ஒரே தல அஜித் மட்டும் தான் என கூறி அவரை திட்டி அந்த பதிவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.மேலும் நெட்டிசன்கள் அஜித்தே அவரை தல என அழைக்க வேண்டாம் என கூறிவிட்டார் பின்னர் நீங்கள் ஏன் சண்டைபோடுகிறீர்கள் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in