The Indian Times

தல 61 படத்தின் இயக்குனர் இவர் தான்! மீண்டும் இளம் இயக்குனருடன் கைகோர்க்கும் அஜித்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாய் ஜொலித்து கொண்டிருப்பவர் தல அஜித். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன் கடின உழைப்பால் இன்று சிகரம் தொட்ட நடிகர் அஜித். கோடிக்கணக்கான ரசிகர்கள் இவரை திரையில் பார்த்தாலே போதும் என்று ஏங்கி தவித்து கொண்டிருக்கின்றனர். நீண்ட நாட்களாக அஜித் ரசிகர்கள் எதிர்ப்பது காத்திருக்கும் ஒரு விஷயம் வலிமை திரைப்படத்திற்காக மட்டும் தான். வலிமை படத்திற்காக ஆர்வமாக காத்திருக்கும் ரசிகர்கள் கடந்த பல நாட்களாக வலிமை அப்டேட் கேட்டு வந்தனர்.

Advertisement

கடைசியாக தயாரிப்பாளர் போனி கபூர் அஜித் பிறந்த நாளான மே 1 அன்று வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்ற தகவலை வெளியிட்டார். இதை தொடர்ந்து படத்தின் ரிலீஸ் காகவும் அஜித் ரசிகர்கள் ஆர்வமாக காது கொண்டிருக்கின்றனர். படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஸ்பெயினில் நடந்து கொண்டிருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. 10 நாட்களின் படப்பிடிப்பு முடிந்து விட்டால் மொத படப்பிடிப்பும் முடிந்து விடும் என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தல அஜித் தன்னுடைய 61 படத்திற்கான இயக்குனரை தேர்வு செய்து கொண்டிருக்கிறார்.

Advertisement

இந்த லிஸ்டில் சுதா கொங்கரா, சிறுத்தை சிவா , விஷ்ணு வரதன் போன்ற இயக்குனர்கள் இருந்துள்ளார்கள். ஆனால் தல அஜித் மீண்டும் வலிமை படத்தை இயக்கம் ஹச்.வினோத்தை தான் தேர்வு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஹச்.வினோத் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற படத்தை இயக்கினார். அதன் பிறகு தற்போது வலிமை படத்தையும் அவர் தான் இயக்கி வருகிறார். இதை தொடர்ந்து தல 61 படத்தையும் ஹச். வினோத் தான் இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அஜித்திற்கு ஒரு இயக்குனரை பிடித்து விட்டால் வரிசையாக அவருக்கு வாய்ப்பு தருவார் என்று அனைவருக்கும் தெரியும். அப்படி தன் சிறுத்தை சிவா வீரம், வேதாளம்,விவேகம்,விசுவாசம் என்று 4 படங்களை அஜித்தை வைத்து இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in