The Indian Times

கீர்த்திசுரேஷ் நடித்த ரங் தே படத்தின் ரங்குலே பாடல் வெளியீடு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கிட்டத்தட்ட சினிமாவில் உள்ள அணைத்து சூப்பர்ஸ்டார்ஸ் உடனும் இவர் ஜோடியாக நடித்திருக்கிறார். இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தமிழ் ,தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிகையாக கலக்கி வருகிறார். இவர் இறுதியாக நடித்த திரைப்படம் மிஸ் இந்தியா திரைப்படம். அதற்க்கு முன்பு நடித்த பென்குயின் ஆகட்டும் மிஸ் இந்திய திரைப்படம் ஆகட்டும் இரண்டுமே ஓ.டி.டி யில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

இவர் நடித்த நடிகையர் திலகம் என்ற படம் தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்து. தற்போது இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.இதை தொடர்ந்து தற்போது தெலுங்கில் ரங் தே படத்தில் நடித்துள்ளார். ரங் தே வரவிருக்கும் இந்திய தெலுங்கு மொழி காதல் படம், வெங்கி அட்லூரி எழுதி இயக்கியது மற்றும் சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸின் பதாகையின் கீழ் சூர்யதேவரா நாக வம்சி தயாரிக்கிறார்.

Advertisement

இந்த படத்தில் நித்தின் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவை பி. சி. ஸ்ரீராம் கையாண்டார், நவீன் நூலி ஆசிரியராக இருந்தார். இந்த படம் 26 மார்ச் 2021 அன்று திரையரங்கில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் ரங்குலே பாடல் வெளியாகி உள்ளது.

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in