The Indian Times

கர்ணன் திரைப்படத்தின் official டீஸர் | தனுஷ் மாரி செல்வராஜ்

தமிழ் சினிமாவில் துவங்கி தன் நடிப்பாற்றலின் மூலம் ஹாலிவுட் சினிமா வரை உச்சம் தொட்ட நடிகர் என்றால் அது தனுஷ் தான். தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். பரியேறும் பெருமாளின் மெகா வெற்றியை தொடர்ந்து காரணன் திரைப்படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். தனுஷ் மாஸாக நடிக்கும் படத்தை விட அசுரன் போன்ற கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் படங்களை மக்கள் இன்னும் விரும்புகிறார்கள். அசுரனின் அசுர வெற்றிக்கு பிறகு தனுஷ் தற்போது கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான கர்ணன் திரைப்படத்தில் நடித்து உள்ளார்.Watch Karnan Trailer Below 

Advertisement

 

இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் 3 பாடல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதிலும் கண்டா வர சொல்லுங்க பாடலை ஸ்டேட்டஸ் வைக்காத ஆட்களே இருக்க முடியாது. இதை தொடர்ந்து சமீபத்தில் வெளியான தட்டான் தட்டான் பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது. சந்தோஷ் நாராயணன் இசையில் தனுஷ் பாட ரசிகர்களை பெரியளவில் கவர்ந்திழுத்தது. அதையும் தாண்டி தனுஷ் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருந்தது கர்ணன் படத்தின் டீசர் வெளியீட்டிற்காக தான்.

Advertisement

மிக பெரிய எதிர்பார்ப்புகள் மத்தியில் தற்போது கர்ணனின் புறப்பாடு என்ற தலைப்பில் கர்ணன் திரைப்பட டீசர் வெளியாகி உள்ளது. இதனை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருவதோடு மட்டுமல்லாமல் தனுஷின் புதிய அவதாரத்தில் வெளியான இந்த டீசர் வைரலாகி வருகிறது. டீசரை பார்த்தாலே அசுரன் போன்ற மற்றொரு அசுர வெற்றியை இந்த படம் தேடி கொடுக்கும் என்ற நம்பிக்கையை கொடுக்கிறது என்றே கூறலாம். Video Embeded Via – Think Music Official Youtube Channel

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in