The Indian Times

பிக் பாஸ் 5 குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் நகுல் ! வைரல் வீடியோ

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் 4 சீஸனுமே மிக பெரிய வெற்றியை பெற்றது. கொரோன பாதிப்பின் காரணமாக போன வருஷம் பிக் பாஸ் ஒளிபரப்பானது என்று நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், வருடத்தின் இறுதியில் துவங்கப்பட்டு தற்போது 2021 ல் முடிந்தது. பிக் பாஸ் சீசன் 4 பட்டத்தை நடிகர் ஆறி தட்டிச்சென்றார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அடுத்த பிக் பாஸ் சீசனுக்கான போட்டியாளர்களை தேடி பிடிக்கும் வேளையில் தீவிரமாக உள்ளனர். அதிலும் இந்த சீசனில் கமலுக்கு பதில் சிம்பு தொகுத்து வழங்க போகிறார் என்ற வதந்திகள் பரவி வந்தது.

Advertisement

இந்நிலையில் தற்போது சில பிரபலங்கள் சீசன் 5 யில் போட்டியாளர்களாக செல்ல போகிறார்கள் என்ற வதந்தி ஊரெங்கும் பரவி வருகிறது. அதில் முக்கியமாக நடிகர் நகுல் கலந்து கொள்ள போகிறார் என்ற வதந்தி பரவி வருகிறது. பாய்ஸ் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நகுல் பெரிய இடைவேளைக்கு பிறகு , உடம்பை குறைத்து காதலில் விழுந்தேன் , மாசிலா மணி ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார். பிறகு சரியான கதைகளை தேர்வு செய்யாத காரணத்தினால் இன்று அவர் சினிமாவில் இருந்து காணாமல் பொய் விட்டார் என்றே கூறலாம்.

Advertisement

https://twitter.com/Mysteri13472103/status/1373962998839046148

இந்நிலையில் தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 5 ல் கலந்துகொள்ள போகிறார் என்ற வதந்தி வைரலாக பரவி வருகிறது. இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நகுல் தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது என்னிடம் யாரும் பிக்பாஸ்ஸில் கலந்துகொள்ளுமாறு கேட்கவில்லை, அப்படியே கேட்டாலும் என்னுடைய தங்கத்தை விட்டுவிட்டு நன் போக மாட்டேன் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in