The Indian Times

மந்திரவாதியாக வந்து சூனியம் செய்யும் ஷிவாங்கி | இந்த வார குக்கு வித் கோமாளி ப்ரோமோ

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. இதில் வரும் கோமாளிகளை ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் வீட்டில் இருக்கும் நபர்களாய் பார்க்க துவங்கி விட்டனர் மக்கள். இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

Advertisement

வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் வைக்கும் அளவிற்கு இருக்கும் அஸ்வின் ஷிவாங்கி யின் காதல் , செட்டில் ஒரு பெண்ணை விடாமல் அனைவரையும் டாவடிக்கும் புகழின் குறும்புத்தனம் , பாலாவின் கோர்வையான கிண்டல் வார்த்தைகள் பார்ப்பவர்களை கண்ணில் தண்ணீர் வரும் அளவிற்கு சிரிக்க வைக்கும். தற்போது இந்த வார குக்கு வித் கோமாளி யின் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வரம் வைல்ட் கார்டு ரவுண்டு என்பதால் எலிமினேட் ஆகி சென்ற தர்ஷ குப்தா , மதுரை முத்து , பவித்ரா , தீபா , ஷகிலா , ரித்விகா ஆகியோர் மீண்டும் கலந்து கொள்கிறார்கள். இந்த வாரம் ந்த வாரம் இதில் யார் வெற்றி பெற்று நான்காவது பைனலிஸ்ட் ஆகா போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in