லெஜெண்ட் சரவணனை சந்தித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் ஷூட்டிங்கிங்ன் போதே இரண்டு பெரிய பிரபலங்கள் சந்தித்து கொள்வது சகஜமான ஒன்று தான். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய பிரபலங்கள் சந்தித்துள்ளனனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று சொன்னால் சின்ன குழந்தைக்கும் தெரியும். தமிழ் சினிமாவில் தற்போது உள்ள அணைத்து நடிகர்களுக்கும் முன்னுதாரணமாய் இருப்பவர் சூப்பர் ஸ்டார். தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் தீவிரமாக நடித்து கொண்டிருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய நடிகை நயன்தாரா

லெஜெண்ட் சரவணனை சந்தித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ! வைரலாகும் புகைப்படம் 1

விளம்பரம்

ஏற்கனவே இவர் நடிப்பில் வெளி வந்த தர்பார் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தேடி தரவில்லை. தற்போது ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படம் வெற்றி அடைய வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளதால் படக்குழுவினர் தீவிரமாக படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் தொடங்கி தற்போது சென்னையில் மும்மரமாக நடந்து வருகிறது. கோகுலம் ஸ்டுடியோஸ் அரங்குகளில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது ரஜினி அதே செட்டில் படப்பிடிப்பு நடத்தி கொண்டிருக்கும் லெஜெண்ட் சரவணனை சந்தித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  ஏழ்மை குடும்பத்திற்கு உதவியாக பைக் வழங்கிய லாரன்ஸ் மற்றும் KPY பாலா

லெஜெண்ட் சரவணனை சந்தித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ! வைரலாகும் புகைப்படம் 2

விளம்பரம்

லெஜெண்ட் சரவணா கடைகளின் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன் தற்போது ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் ஆக்ஷன் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சரவணனுக்கு ஜோடியாக ஊர்வஷி ரௌட்டலா நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கும் சென்னை கோகுலம் ஸ்டுடியோஸ்சில் நடந்து வருகிறது. அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லெஜெண்ட் சரவணனை சந்தித்துள்ளார். அதில் சரவணனை பார்த்து ரஜினி கும்பிடும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment