The Indian Times

மீண்டும் BIKE RACE… புயல் போல பைக் ஒட்டிய தல அஜித்… அரண்டு போன படக்குழு

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு கொண்டவர்களாக உள்ளனர் இவர்கள் ரசிகர்கள் .அண்மையில் இவரின் நடிப்பில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது .வசூலிலும் சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.தற்போது அஜித் மீண்டும் இயக்குனர் வினோத் இயக்கத்தில்,போனிகபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிசியாக நடைபெற்று வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து பலரும் கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.ஏற்கனவே இதுபோல வேதாளம் படத்தில் இவரை உருவ கேலி செய்ததற்கு விவேகம் படத்தில் உடல் எடையை குறைத்து பார்ப்பவர்களை கதிகலங்க செய்தார் அஜித் அதன்படி தற்போதும் அஜித்குமார் உடல் எடையை குறைத்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகியது.நடிகர் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

Advertisement

இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வரும்பொழுது அஜித் அங்கு பைக் ரேஸ் சென்றுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.புயல் வேகத்தில் அஜித் பைக் ஓட்டும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வெறியாகி ட்வீட்டரி,பேஸ்புக் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரலாக்கி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in