The Indian Times

அப்பா சூப்பரா பாடுறீங்க… நடிகர் நகுல் பாடுவதை ரசித்து கேட்ட அவர் மகன்

பாய்ஸ் படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் நகுல்.இப்படத்தில் உடல் எடை அதிகம் காணப்பட்ட இவர் படத்தில் நடிக்க வேண்டும் என உடல் எடையை முற்றிலும் குறைத்தார்.இவர் கதாநாயகனாக அறிமுகமாகிய முதல் படம் காதலில் விழுந்தேன்,இப்படம் 2008 ஆம் ஆண்டு வெளியாகியது.இப்படம் பெரும் வரவேற்பினை பெற்றது.நடிப்பு மற்றும் நடனத்தில் பட்டையை கிளப்பி வெகுவாக ரசிகர்களை கவர்ந்திழுத்தார் நகுல். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்படத்தினை தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.கடந்த சில வருடங்களாக இவர் தேர்ந்தெடுக்கும் படம் இவருக்கு தோல்வியை கொடுத்து வருகிறது.இதனால் தற்போது படங்களில் கவனமாக நடித்து வருகிறார்.இவருக்கு திருமணம் ஆகி ஆண் மற்றும் பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இவர் படப்பிடிப்பு நேரம் தவிர்த்து குழந்தைகளுடன் நேரத்தினை செலவிட்டு வருகிறார்.அடிக்கடி இவர் தனது குழந்தைகளுடன் இணையத்தில் வீடியோ வெளியிட்டு வருகிறார்.

Advertisement

இவர் தமிழ் சினிமாவில் நடிகர் மட்டுமில்லை பாடகரும் கூட பல பாடல்களை தனது குரலில் படித்து பல வெற்றிப்பாடல்களை கொடுத்துள்ளார் நகுல்.தற்போது இவர் தனது மகனுக்காக அழகிய பாடல் ஒன்றை பாடி இசையமைத்துள்ளார்.இவர் பாடலை அவரது மகன் ரசித்து கேட்டுள்ளார்.இந்த வீடியோவை நகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பினை பெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in